×

வயிற்றில் மாத்திரை வடிவில் கடத்தி வந்த ரூ.2.17 கோடி தங்கம் பறிமுதல்: 8 பேர் கைது

சென்னை: துபாயிலிருந்து நேற்று முன்தினம் ஏர்இந்தியா சிறப்பு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த திருச்சியை சேர்ந்த கனகவள்ளி (56), நிஷாந்தி (30), கலா (53), பாத்திமா (34), புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ் (55), ஜெகதீஷ் (37), கபர்கான் (52), ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது ஹக்கீம் (25) ஆகிய 8 பேர் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களது வயிறு பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அதில், தங்க மாத்திரை உருண்டைகள் வயிற்றில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, ‘இனிமா’ கொடுத்து 161 தங்க மாத்திரைகளை வெளியே எடுத்தனர். அதன் எடை 4.15 கிலோ. அதன் மதிப்பு ரூ.2.17 கோடி. இதையடுத்து 8 பேருக்கும் மீண்டும் மருத்துவ சிகிச்சையளித்து சென்னை விமான நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலிடம் இருந்து குறைந்தளவு பணத்திற்காக வயிற்றில் தங்கம் கடத்தி வந்தது தெரியந்தது. அவர்களை கைது செய்தனர்.


Tags : 817 arrested for smuggling Rs 2.17 crore worth of gold in pill form
× RELATED சென்னையில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!!